Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம்.

0

 

திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர்
கோவில் தேரோட்டம்.நாளை நடைபெற உள்ளது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சுவாமி அம்பாளுக்கு நித்தியப்படி பூஜைகளுடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்திரசேகரர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் புறப்பாடுகள் நடைபெற்றது.கோப்பு படம்

அஷ்டக்கொடியேற்றம் 28ம் தேதி நடந்தது. இன்று
(வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி, அம்பாள் தெருவடச்சானில் வீதியுலா வரவுள்ளனர்.

தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை நடக்கவுள்ளது.

காலை 3 மணிக்கு உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருள்கின்றனர். காலை
6.30 மணிக்கு தேர்வடம் பிடிக்கப்படவுள்ளது. திருவானைக்காவலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியே 2 பெரிய தேர் உண்டு. அவை இரண்டும், ஒரேநாளில் அடுத்தடுத்து வடம்பிடிக்கப்பட்டு வலம் வரும். அம்மன் தேருக்கு ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.