Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 1,150 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்,உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு அதிரடி நடவடிக்கை.

0

திருச்சி தனியார் நிறுவனத்தில்
1.150 லிட்டர் கலப்பட எண்ணைய் பறிமுதல்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி மாநகர பகுதிகளில் அதிகமாக உணவு பொருட்களில் கலப்படம் செய்வதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் திருச்சி மாநகரில் முக்கியமான தனியார் நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு சுமார் 1,150 லிட்டர் எண்ணெய் டின்களில் இருந்துள்ளது.
அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை கலப்படம் செய்யப்பட்ட எண்ணை என்பது உறுதியானது.

பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறியதாவது:
இதுபோன்று என்னை தயாரிப்பு மற்றும் மொத்தமாக பேக்கிங் செய்பவர்கள் கலப்படம் இல்லாத உணவு எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 என்கிற பிரிவின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்களும் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் சந்தேகமும், கலப்படம் இருக்கிறது என்று தெரிந்தால் உடனடியாக
99449 59595 என்கிற செல்போன் எண்ணிற்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள். கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.