திருச்சி திம்மராய சமுத்திரத்தில் வாலிபரை மிரட்டி
பணம் பறித்த வாலிபர் கைது.
திருச்சி திருவானைக்காவல் அழகிரி புரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ஐயப்பன். (வயது 22 ).இவர் திம்மராய சமுத்திரம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இவரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, வசந்த் என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவர் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் என்பதும்,அவர் மீது திருவரங்கம் காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.