மணப்பாறையில் 4 ஆண்டுக்கு முன்பு காணமல் போன தாயை கண்டுபிடித்த மகன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி தனலெட்சுமி (வயது 50) சற்று மனநலம் பாதித்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது காணமல் போய்விட்டார்.
இந்த நிலையில் தாய் தனலெட்சுமியை பல்வேறு இடங்களில் தேடிய மகன் மற்றும் உறவினர்கள் இன்று மணப்பாறை காவல் நிலையம் அருகே தேவாலம் அருகே அமர்ந்திருந்ததை பார்த்த மகன் சந்திரன் அடையாளம் கண்டு இதுபற்றி மணப்பாறை காவலர் ராஜ்கமல் உதவியை நாடினர்.
காவலர் ராஜ்கமல் மனிதநேயத்துடன் செயல்பட்டு அந்த பென்னிடம் லாபகமாக பேசி தனலெட்சுமியை ஆம்புலன்ஸில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
சுமார் 1 மணிநேரமா காவலர் ராஜ்கமல் மனநலம் பாதித்த அந்த பென்னிடம் பேசிய காட்சி அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆனந்த கண்ணீருடன் காவலர் ராஜ்கமலை பாராட்டினர்.
தாயை 4 ஆண்டுக்கு பின் கண்ட மகன் தாயை மீட்க போராடிய சம்பவம் பார்போரை கண்கலங்க வைத்தது.
தாயை மீட்டு தந்த காவலர் ராஜ்கமலுக்கு மகன் கண்ணீருடன் நன்றி கூறினார்.