ஹிஜாப் விவகாரம்:
மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்து திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடக வங்கியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.