தமிழகத்தில் உள்ள
கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
கிறிஸ்தவ போதகர்கள் மாநாட்டில் தீர்மானம்.
திருச்சி ஐ.சி.எப்.பேராயம், ஜே.கே .சி.
அறக்கட்டளை சார்பில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு திருச்சியில் ஐ.சி.எப்.பேராயர் பா. ஜான் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
மாநிலச் செயலாளர் ஜான் சாமுவேல், ஐ.சி. எப்.திருச்சி -தஞ்சை மண்டல தலைவர் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜ், நெல்லை மாவட்ட பேராயர் தலைவர் சாமுவேல் ராஜ்குமார்,
ஹோலி மிராக்கல் ஆலய பேராயர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்னிந்திய திருச்சபை திருச்சி- தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார் .
.டி.இ.எல்.சி திருச்சபை பேராயர் டேனியல் ஜெயராஜ், ஆங்கிலிக்கன் திருச்சபை சேர்மன் பேராயர் மார்ட்டின், அரவனைக்கும் கரங்கள் டிரஸ்ட் பேராயர் நோவா, கிறிஸ்தவ விசுவாச ஊழியர் ஐக்கியம் நிறுவனர் ஜேம்ஸ் பாண்டியன், நாசரேத் பேராயம் டேவிட் ஞானையா ,
சிறுபான்மை மக்கள் ஐக்கிய தலைவர் பேராயர் அந்தோணி சாமி, தென்காசி மாவட்ட தலைவர் டேனியல் ராஜா , இ.எப்.சி சி பொதுச் செயலாளர் டேவிட் பரமானந்தம், இந்திய பூரண சுவிசேஷ தேவ சபை பேராயர் அன்பழகன்,ஸ்டீபன், தனபால், கிறிஸ்தவ ஐக்கிய கூட்டமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் ராஜன், விஜய்பாபு ,
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், திருச்சி அரிமா சங்க தலைவர் லயன் வசந்தகுமார் ,
திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பார்த்திபன், முன்னாள் தாசில்தார் அப்துல் அஜீஸ் ,ஜே.கே.சி அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் ரவிசேகர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்தவ போதகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முடிவில் திருச்சி மாவட்ட ஐ.சி.எப்.தலைவர் ஜான் டோமினிக் நன்றி கூறினார் .மாநாட்டில் தமிழகத்தில் திருச்சபைகள், ஆலயங்கள் ,
ஜெப ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கிட கலெக்டர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கிறிஸ்தவ ஆலயங்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.