திருச்சி மாமன்ற உறுப்பினர்கள் ஏழை மக்களை துன்புறுத்தினால் சாலையில் இறங்கி போராடுவேன் முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் உறுதி.
ஏழை மக்களை துன்புறுத்தினால் முன்னால் நிற்பேன்:
முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் உறுதி.
தற்போது திருச்சி மாநகராட்சி தேர்தல் முடிவடைந்து மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல வார்டு பகுதிகளில் தரை கடை மூலம் ஏழை எளிய மக்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
காய்கறி, பழம், சட்டி, பானை உள்ளிட்ட பல வகையான வியாபாரங்களை ஏழை எளிய மக்கள் சாலையோரங்களில் செய்து வருகின்றனர்.
தரைக்கடை, தள்ளுவண்டிகளில் இவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் மாநகராட்சி பெயரைப் பயன்படுத்தி தற்போது வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் சிலர் சட்டவிரோதமாக மிரட்டி பணம் வசூலிப்பதாக புகார் கிடைத்துள்ளது.
மாமன்ற உறுப்பினர்களோ, காவல் துறையினரோ, இதர துறையினரோ சட்டவிரோதமாக இந்த வியாபாரிகளிடம் பணம் வசூலிக்க கூடாது.
அவ்வாறு யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால் என்னை தொலைபேசியில் (9952133422)தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அவர்கள் மீது மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க ஆவனம் செய்யப்படும்.
ஏழை மக்களுக்காக முன்னால் நின்று போராடுவேன்.
மேலும் மத்திய அரசு சார்பில் ஏழை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும். ஏழை வியாபாரிகளிடம் சட்ட விரோதமாக பணம் வசூலில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேயர் அன்பழகனிடம் மனு அளித்தபோது இந்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு (ஹெச்.எம்.கே.பி ) மாநிலச் செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி, அரியலூர் மாவட்ட தலைவர் சந்திரமோகன் சிவகங்கை மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.