பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்யக்கோரி
இந்து எழுச்சி பேரவை
தமிழக முதல்வருக்கு மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து எழுச்சி பேரவை சோழ மண்டல அமைப்பாளர் சீனிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் நாளுக்கு நாள் மத அடிப்படை வாதத்தின் மூலமாக தேச அமைதியினை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்களை உடனடியாக தடைசெய்து தேச நலன் காக்க வேண்டும்.
மேலும் தொடர்ந்து பொது மேடைகளில் இந்த அடிப்படைவாத இயக்கங்கள் விஷம பிரச்சாரம் மேற்கொள்வது மட்டும் அல்லாது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தினை கேள்வி குறியாக்கும் வண்ணம் பயங்கரவாத பேச்சுகளையும், செயல்களையும் செய்து வருகின்றனர்,
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுப்பது, அப்பாவி தேச மற்றும் இந்து தர்ம நலம் விரும்பிகளை கொலை செய்வது, போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அரசாங்கம் தொடர்ந்து இவர்கள் செய்யும் தேச விரோத செயல்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
தமிழக முதல்வர் உடனடியாக மேற்கண்ட அடிப்படைவாத இயக்கங்களை தமிழகத்தில் தடை செய்து தேச நலன் மற்றும் அமைதியை காத்திடுமாறு பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறோம். என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது மாநில பொது செயலாளர் சதீஷ் கண்ணா, அமைப்பாளர் கார்த்தி, திருச்சி மாவட்ட தலைவர் மதன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.