Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தடகள வீராங்கனை தனலட்சுமி பெடரேஷன் கோப்பையில் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார், மக்கள் சக்தி இயக்கம் பொருளாளர் கே.சி.நீலமேகம்.

0

'- Advertisement -

2022 ஆண்டுக்கான பெடரேஷன் கோப்பை தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சிக்காக தனலட்சுமியும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே கேரளத்துக்குச் சென்று
அங்கு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தேசிய அளவிலான இந்த போட்டிகளில் நேற்று( 16.03.22) நடைபெற்ற
பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதில், தேசிய அளவில் சிறந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Suresh

இப்போட்டியில், தனலட்சுமி 23.21 விநாடிகளில் கடந்து
நடப்பு சாம்பியன் ஹீமா தாசை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஹீமா தாஸ் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதே போல் 2021-ல் நடை பெற்ற 200 மீட்டர் போட்டியில் முதலிடம் பிடித்த தனலட்சுமி, பி.டி. உஷாவின் சாதனையை 23 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்திருந்தார்.

தற்போது மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தனலட்சுமிக்கு பெடரேஷன் கோப்பையில் முதலில் வந்து தங்கம் வெல்ல வேண்டும் என வாழ்த்துக்களை மக்கள் சக்தி இயக்க சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்
கே.சி. நீலமேகம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.