
திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேக தின விழா 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அடுத்த திருநெடுங்களம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரு நெடுங்களநாதர் திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையின் திருஞானசம்பந்தர் பெருமானால் இடர்களையும் பதிகம் பாடல் பெற்ற திருத்தலமாகும்.இங்கு இறைவன் நித்திய சுந்தரேஸ்வரராகவும் இறைவி மங்களாம்பிகை யாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.ஆலயத்தின் மகா கும்பாபிஷேக தினம் வரும் மாசி 30ஆம் தேதி 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வாகனம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை,யாக வேள்விகள், ருத்ர திரிசதிஹோமம், திரவியாஹீதியும்,ஒன்பது மணிக்கு செல்வ விநாயகர் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை மற்றும் உற்சவ பஞ்சமூர்த்திகள் நால்வருக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதி மகாதீபாராதனை மூலவருக்கு கலச அபிஷேகம் 108 சங்காபிஷேகம் உற்சவ பஞ்சமூர்த்திகள் நால்வர் மகா தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வெற்றிவேல் தலைமையில் சிவநெறி செம்மல் சோமசுந்தர சிவாச்சாரியார், ரவி, ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.