கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் – 2022
மகாத்மா கண் மருத்துவமனை பி. லிட்., தென்னூர், திருச்சி.
தமிழ்நாடு ஆப்தால்மிக் அசோசியேசன் சார்பில் மகாத்மா கண் மருத்துவமனை திருச்சி கல்லுகுழி இரயில்வே மைதானத்தில் கண் நீர் அழுத்தத்திற்கான விழிப்புணர்வு முகாம் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் கண் பார்வை அளவிடுவதற்கு கண் நீர் அழுத்த பரிசோதனை. விழித்திரை படம் எடுத்தல், மையக்கரு தடிமன் அளவிடுதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
35 வயதிற்கு மேற்பட்டவர்கள், கண் நீர் அழுத்த நோய் உள்ளவர்கள், கண் நீர் அழுத்த நோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மகாத்மா கண் மருத்துவனை மருத்துவர்கள் மற்றும் செவிலயர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டனர். ரு.2000 மதிப்பிலான இந்த பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மைதானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் தலைமை மருத்துவர்கள் அனைவரும் பங்குபெற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் மற்ற பரிசுகளை வென்றவர்களுக்கும் கண் நீர் அழுத்த பரிசோதனைகளில் உள்ள பெயர்களிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன.
சுமார் 300 பேருக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.