திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி.
திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் ஆற்றுப்படுத்தும் பயிற்சி நடைபெற்றது .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேலின் ஆலோசனைப் படியும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் ஆற்றுப்படுத்தும் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவரும், இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலாளருமான இன்ஜினியர். ராஜசேகர் தலைமையேற்று துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் பயிற்சியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் முதல்வர் முனைவர். வாசுகி முன்னிலை வகித்தார்.
இந்த யூத் ரெட் கிராஸ் ஆற்றுப்படுத்தும் பயிற்சியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியை சேர்ந்த 260 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த நிகழ்வை சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் முனைவர். விஜயராணி, முனைவர். தனலட்சுமி மற்றும் முனைவர். மணிமேகலை ஆகியோர் ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தனர்.