அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கோரிக்கை .
அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இவ்மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவர்கள் பஸ் ஸ்டாப்களில் நிற்கும் மாணவர்களை ஏற்றி செல்ல பஸ் ஸ்டாப்களில் நிற்காமல் கொஞ்சம் துரம் சென்று போய் அரசு மற்றும் தனியார் பஸ் நிற்பதனால் மாணவர்கள் புத்தக பேக்கை துக்கி கொண்டு பஸ்ஸில் ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. ஆகவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக பஸ் ஸ்டாப்களில் நின்று பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் சரியான நேரத்திற்கு பஸ் ஸ்டாப்களுக்கு வராமல் தாமதிப்பதனால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . ஆகவே பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வர அரசு பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் .
அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்வதனால் பொதுமக்கள் நெருக்கடில் சிக்கி தவித்தும் பஸ்ஸில் ஏற்வதற்கும் இறங்குவதற்கும் மிகவும் சிரமம் பட்டு பயணம் சென்று வருகிறார்கள்.
ஆகவே கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள் மீதும் படி கட்டில் நின்று பயணம் மேற் கொள்பவர்கள் மீதும் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கேட்டு கொள்கிறோம் என அவ்மனுவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.