பாடங்கள் இம் மாதத்தில் முடிக்கப்படும், அடுத்த மாதம் திருப்புதல் தேர்வு நடக்கும்.அமைச்சர் மகேஷ் பொய்யமொழி திருச்சியில் பேட்டி.
இம்மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்:
ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின்
29வது நினைவு நாளை முன்னிட்டு
திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு
திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சித் துறை அமைச்சருமான
கே.என்.நேரு தலைமையில்
,தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாைதை செலுத்தினர் .
இந்தநிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிகுமார் மாமன்ற உறுப்பினர்கள் மதிவாணன்,
காஜாமலை விஜி , கொட்டப்பட்டு தர்மராஜ்,பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர் .
தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்பில் அறக்கட்டளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ,
தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகள்,
மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள காசோலைகள், பள்ளிகளுக்கு தேவையான கணினிகள் ஆகியவற்றை வழங்கினார்.
பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர்,
துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி,
மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.
கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சமது, திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா, மலைக்கோட்டை பகுதி செயலாளர்
மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி ,பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.