ஆசிரியர் கலந்தாய்வில் தொடரும் அவலம்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பாரா? ம. நீ.ம வழக்கறிஞர் கிஷோர் குமார் .
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் கலந்தாய்வில் தொடரும் அவலம்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை என்ன…?”
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தை போல் தமிழக ஆசிரியர் பணியிட மாறுதல் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் மேற்படி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் இந்த சூழலில் பள்ளி கல்வி துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் இதை பற்றி தீவிர ஆய்வு பணியை மேற்கொண்டு தனது துறை மீதான குற்றச்சாட்டில் உண்மையிருக்கிறதா இல்லையா என தீவிர ஆய்வு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேற்படி வழக்கில் பொறுப்பு வகிக்கும் துறை அமைச்சர் மேயர் பதவியேற்பு வைபோகத்தில் கலந்துகொண்டார். பதவியேற்பு வைபோகத்தில் கலந்துகொள்வது அமைச்சரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தனது துறை மீது உயர்நீதிமன்றம் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தியுள்ள சூழலில் அதன் மீது தனிகவனம் செலுத்தி தீர்க்கவேண்டி துறை அமைச்சர் அதற்கு சற்றும் சம்மந்தமில்லாது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது ஏற்புடையது இல்லை. எனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் உடனடியாக ஆசிரியர் கலந்தாய்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக ஆசிரியர் பணியிடமாறுதலில் வெளிப்படைதன்மையை மேம்படுத்தி முறைகேடுகளை தடுக்க திருச்சி தென் மேற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கோருகிறோம்.
என திருச்சி தென் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி செயலாளர் வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.,