நாளை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா மற்றும் ஒமிகிரான் தொற்று காரணமாக பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் முன்னிட்டு நாளை 3ந் தேதி (வியாழக்கி ழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி தென்னூர் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தனது கூறியுள்ளார்.