திருச்சி 17வது வார்டில் திமுக கூட்டணியில் தென்னமர சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பிரபாகரனின் அறிக்கை.
திருச்சி 17 வது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நான் 17 வது வார்டில் திமுகவின் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்களின் பிரச்சனைக்காக பல போராட்டங்களிலும், அவர்களுக்கு நலனுக்காக தினந்தினம் பாடுபடும் என்னை நன்கு இப்பகுதி பொதுமக்கள் அறிந்த இருப்பதால் எனக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில பத்திரிக்கை நண்பர்கள் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டு தனியாக வெப்சைட் நடத்தி அதில் தேர்தல் பேக்கேஜ் என பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிட்டு வந்தனர்.
இது அவர்களின் சொந்த உழைப்பு. அதுபற்றி கருத்து கூட எனக்கு எந்த அது பற்றி கருத்து கூற எனக்கு எந்த விருப்பமும் இல்லை.
ஆனால் இன்று என்னை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெறுவார் என அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ஆதரவோடு,மக்களின் நன்மதிப்போடு தேர்தலில் போட்டியிடும் நான் தோல்வி அடைவேன் எனக்கூறும் அவர்களை என்ன சொல்வது?
அவர்களது கருத்துக்கணிப்பு உண்மையானால் அவர்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இதுவே கருத்து கணிப்பு தவறு என்றால் …..
விளம்பரத்துக்காக பணம் பெற்றுக்கொண்டு எப்படியும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் செய்தி வெளியிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என 17 -வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்னமர சின்னத்தில் போட்டியிடும் ந.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.