திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் புங்களாயித்தெரு,
கமலா ஸ்டோர், மகாலட்சுமி நகர்,முத்துமணி டவுண், பிச்சை நகர், செந்தண்ணீபுரம்
உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 35 வது வார்டில் போட்டியிடும்
சுயேச்சை வேட்பாளர் எம்.செல்வகுமார் நேற்று அரியமங்கலம் கோட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இப்பகுதியில் பொதுமக்களிடையே எளிமையாக பழகக்கூடியவர் செல்வகுமார்.எனவே சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளராக கருதப்படுகிறார்.