Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

0

 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்து நடால் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஐந்தாம் நிலை வீரரான 35 வயது ரஃபேல் நடால் படைத்தார்.

மேலும் 2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.