தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மே 1ம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடக்கம். திருச்சி கலெக்டர் அறிவிப்பு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மே 1 முதல் 15ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.
தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், இறகுப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்றுநா்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்போருக்கு தினமும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார்