தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 671.15 கோடி ரூபாய் மதிப்பிலான 17 முடிந்த திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும் 5 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லுார் பேரூராட்சியில் 30.11 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டம், எஸ்.கண்ணனுார் பேரூராட்சிக்கான 19.45 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தை அவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன், அன்பில்மகேஷ் பெய்யாமொழி, கயல்விழி செல்வராஜ்,
கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மதிவேந்தன்,
நகராட்சி குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், நகராலட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும்
திருச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லுார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் எழிலரசன்,ஆனந்த், பெரூராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.