அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி k.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க
தமிழகத்தில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி இன்று (ஜனவரி 22ஆம் தேதி ) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எதிரிகளின் சிம்மசொப்பனம் செயலாளர் ப. குமார் தலைமையில்
லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான விடியா அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன …
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.