அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த சித்த மருத்துவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த புத்தாண்டு பிறந்ததை உலகம் முழுவதும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
அனைத்து மத மக்களும் அவரவர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர். நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த வகையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவை திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் அவர்கள் வாழ்த்தினர். முன்னதாக திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகளையும் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்தும், கேக் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் மருதுபாண்டி, ஆர்.கே.ராஜா மற்றும் சித்த மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.