Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம்.காயல் அப்பாஸ்.

0

'- Advertisement -

*மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !*

Ad banner

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்களை நியமித்து இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் திருச்சி, தென்னூர், சின்னச்சாமி நகரை சேர்ந்த எஸ். ஷாஜகான் மாநில பொது செயலாளராகவும், விருது நகர் மாவட்டம், கோவில் பட்டி, ஓன்டிப்புலிநாயக்கனூர் , சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த தேவசகாயம் மாநில செயலாளராகவும், கடலூர் மாவட்டம், சிதம்பரம், உசுப்பூர், கலிய பெருமாள் நகரை சேர்ந்த வெற்றிச்சந்திரன் தமிழ்நாடு – புதுச்சேரி – மாநில அமைப்பாளராகவும், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம், தைக்கா தெருவை சேர்ந்த சாத்தை ரஹ்மான் மாநில இளைஞரணி செயலாளராகவும், காயல் பட்டிணம், பைபாஸ் ரோடு சேர்ந்த இபுறாஹிம் மாநில இளைஞரணி துனை செயலாளராகவும், இன்று 27-12-2021 முதல் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் . தாங்களின் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.