Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…

0

'- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.

மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த் – சசிகலா இடையே ஒருமணி நேரத்திற்கும் மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளார்.

Suresh

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சசிகலா நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார்.

ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக குண்மடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவரின் உடன்நலன் பற்றி கேட்டறிந்தார்.

மேலும், ரஜினிகாந்த் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும், தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் சசிகலா தெரிவித்துக்கொண்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.