Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 18-11-21 முதல் 21-11-21 வரை நடைபெற்ற மாநில அளவிளான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட குத்துசண்டை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுபரிசு வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிளான குத்துசண்டை விளையாட்டு போட்டியில் திருச்சி மாவட்ட குத்துசண்டை கழகம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் 30 க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்ச்சியாளர் R.செல்வகுமார் NIS (SDAT) மற்றும் BHEL பயிற்ச்சியாளர் A.M.எழில் மணி (NIS) ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பல்வேறு எடைபிரிவில் வீரர் வீராங்கணைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட குத்துசண்டை கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 23 நபர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

(1).(Under 12 பெண்கள் பிரிவில் 1தங்கம், 1வெள்ளி )

(2).(Under 12 ஆண்கள் பிரிவில் 1தங்கம் ,3வெள்ளி)

(3).(Under 15 ஆண்கள் பிரிவில் ,1தங்கம்,
3.வெள்ளி , 2வெண்கலம் வெண்களம்)

(4.)(Under 16 ஆண்கள் பிரிவில் 1வெள்ளி)

(5).Under 18 ஆண்கள் பிரிவில் 1.வெள்ளி, 4.வெண்கலம்)

(6.)Senior ஆண்கள் பிரிவில் 2.தங்கம் 3.வெள்ளி)

உள்ளிட்ட பதக்கங்களை வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் பாராட்டும் நினைவு பரிசும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் M. E. நடராஜன் (NIS) (Air Veteran) வழக்கறிஞர் லி.ச.பாவாணன், வழக்கறிஞர் ஆறுமுகம், வழக்கறிஞர் கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஹொப் டிரஸ்ட்டின் நிறுவனர் ஹோப். தினேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார் .

மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம் தினசேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி உமன்ஸ் பவர் சமூக ஆமைப்புகளின் நிர்வாகிகள் ஜூலி LEO Poor People Trust ,ராபின் கிறிஸ்டி M.P பீர்மீரான் T.T.I (Srly Tpj) ர உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்பாபு, ரத்தினம், மைக்கேல், அரவிந்த், மணி, வெள்ளைசாமி, பாபு, ராஜேஷ், செந்தில்குமார், மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.