Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி.

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி.

0

'- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி அன்று முழுவதும் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.

Ad banner

தற்போது தமிழக அரசு அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும்.

தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டு தமிழகத்தில்  இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.