Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.

0

'- Advertisement -

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).

இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் .

அதில் அவர் கூறியிருப்பதாவது;- என்னை கொரோனா வைரஸ் நோய் தாக்கியது. அதைத்தொடர்ந்து கரும் பூஞ்சை நோய் தொற்றிக் கொண்டது.

இதனால் எனது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டு மோசமானது .

இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த கண்ணை டாக்டர்கள் அகற்றி விட்டார்கள்.

தற்போது ஒரு கண் பார்வை மட்டுமே உள்ளது. வாடகை வீட்டில் வசித்து வரும் நான் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறேன்.

தற்போது எந்த வேலையும் இல்லாமல் குடும்பச் செலவுக்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறேன்.

ஆகவே கடை வைத்து பிழைப்பதற்கு வங்கி கடன் உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.