திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சையில் நடந்த அரசு பணியாளர்கள் சங்க மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சரவணன் பேசியதற்காக விசாரணையின்றி பணி நீக்கம் செய்ததை கண்டித்தும்,
மீண்டும் பணி வழங்க கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவரும்,டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு நகராட்சி துறை மாநில தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், அண்ணாதுரை,
பிச்சை பிள்ளை, பாண்டியன், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.