விண்ணை தொட்ட காய்கறி விலை. முதல்வர் நடவடிக்கை எடுக்க திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கோரிக்கை.
காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு.
பொதுமக்கள் கவலை ..
.தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும் …
பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் ….
சுங்க கட்டணம் உயர்வாலும்..100 நாட்கள் வேலைத்திட்டத்தின் எதிரொலியால் விவசாய கூலி ஆட்கள் கிடைக்காத காரணத்தினாலும் …
விண்ணைத் தொட்ட விலைவாசி உயர்வு
காந்தி மார்க்கெட் இன்றைய காய்கறி நிலவரம்:
முருங்கைக்காய் கிலோ 150 ,
தக்காளி கிலோ 100 ,
கத்தரிக்காய் 100,
அவரக்காய் கிலோ 100 ,
பீர்க்கங்காய் 70,
வெண்டைக்காய் 80,
புடலங்காய் கிலோ 70, கோவக்காய் கிலோ 70, வெங்காயம் கிலோ 40- 30
உருளைக்கிழங்கு
கிலோ 40 ,
மாங்காய் கிலோ 60 ,
மிளகாய் 60 ,
பீன்ஸ் 80 ,
காரட் 50 ,
கோஸ் 40 ,
சௌ சௌ 30 …
சென்ற கொரரோனா.. காலத்தில் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தற்போது தான் மக்கள் மீண்டு வருகிறார்கள் ..
இந்நிலையில் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் காய்கறி விலை வாசி உயர்வு பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுத்தர மக்கள் காய்கறியை கண்ணால் மட்டுமே பார்க்க முடிகிறது
.தினசரி 50 ரூபாய்க்கு வாங்க வேண்டிய காய்கறி தற்போது 200 ரூபாய் ஆகிறது.
தினசரி ரூபாய் 500 சம்பாதிக்கும் குடும்பத்தலைவன் காய்கறிக்கு மட்டும்.200 செலவு செய்தால் வீட்டு செலவை எப்படி சமாளிப்பது என்று திணறுகிறார்கள் இல்லதரசிகள் .
தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு …
விடியல் அரசு தருகிறோம் என்ற வீர முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த தங்களின் ஆட்சியில் விலைவாசியை உயர்வை கட்டுக்குள் வைப்பது தங்களின் கடமையாகும் ,
அதற்கு விவசாயிகளுக்கு பலதரப்பட்ட சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்
தற்போது குளம் போல் காட்சியளிக்கும் விவசாய நிலங்களை வெளிநாடுகள் போல் போர்க்கால நடவடிக்கை எடுத்து நிலத்தை பதப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் மார்கழியில் பயிரிட்டால் கூட பங்குனி மாதத்தில் அறுவடை செய்ய காய்கறி விலைவாசி கட்டுக்குள் வரும்,
மேலும் 100 நாள் வேலைகளை ரத்து செய்து அவர்களை விவசாய வேலைக்கு அரசு மானியத்துடன் அனுப்பவேண்டும்
விவசாய வேலைக்கு ஆட்கள் இல்லாமல் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டது நாடே அறிந்தது .
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை அரசு இலவச வாகனங்களில் மார்க்கடட்டிற்கும், சந்தைகளுக்கும் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் .
வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் ..
பெட்ரோல் டீசல் போடும் காய்கறி வாகனங்களுக்கு மானியத்துடன் விலையை குறைக்க வேண்டும் .
உழவர் சந்தைகளில் காய்கறி விலைவாசி கட்டுக்குள் வைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ..
இவை அனைத்தும் நடந்தால் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வார்கள் …
இவன் :
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றப சங்கத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன்