Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே திருடர்களை பிடிக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.

0

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை – கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56).

நேற்றிரவு ரோந்து பணியியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நவல்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்த முயன்றார், அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

அவர்கள் ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட பூமிநாதன் அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார். அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது பூமிநாதன் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை வளைத்து பிடித்தார்.

இதனை அறிந்த மற்றவர்கள். பூமிநாதனிடம் பிடித்தவர்களை விட்டுவிடுமாறு கூறி உள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது என கூறியதால் அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளல் பூமிநாதன் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேய ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

நள்ளிரவு 2 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் காலை
5மணியளவில் தான் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் வெட்டி கொலை செய்யப்பட்ட பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் படுகொலை சம்பந்தப்பட்ட கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற காவல்துறை துணை ஆய்வாளர் வெட்டிக்கொலை
செய்யப்பட்ட
சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.