மத்திய சிறையில் கைதிகளுக்கு
துரித உணவு தயாரிக்கும் பயிற்சி
திருச்சி மத்திய சிறையில் 35 கைதிகளுக்கு, துரித உணவு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய சிறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆர்.எஸ்.இ.டி.ஐ. சார்பில் 35 சிறை கைதிகளுக்கு, துரித உணவுகள் தயாரிப்பு பயிற்சி 10 நாள்கள் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் துரித உணவுகள் தயாரிப்பு, விநியோகம், வாழ்க்கை கல்வி, வங்கி சேவை மற்றும் நிதி ஆலோசனைகள் உள்ளிட்ட துறை சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மத்திய சிறை துணைத்தலைவர்
(டி ஐ ஜி) கனகராஜ் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி முடித்த
சிறைவாசிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆர்.எஸ்.இ.டி.ஐ. இயக்குனர் அகல்யா மற்றும் உதவி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், மதிப்பீட்டாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
இறுதியாக ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணி நன்றி தெரிவித்தார்.

