கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
1.
திருச்சியில்
கஞ்சா விற்ற
2 வாலிபர்கள் கைது .
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் இ. பி. ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் இ.பி.ரோடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இ.பி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த காமராஜர் நகரைச் சேர்ந்த குருசாமி மகன் கதிரேசன் ( வயது 18) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி பாபு ரோடு பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்றதாக கமலா நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாக்கியராஜ் (வயது 26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2.
திருச்சி மன்னார்புரம்
தற்காலிக பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
போலீசார் விசாரணை.
திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக பஸ் நிலையம் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை செயல்படும் .
அங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது .தற்போது அந்த பஸ் நிலையம் பரபரப்பாக இயங்கி வருகிறது .இந்நிலையில் அந்த பஸ் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து திருச்சி கல்லுக்குழி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் அப்பகுதியில் தங்கியிருந்து பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால் அவர் பெயர்? யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில்
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 12 லட்சம் மோசடி.
திருச்சியில் வாலிபர் கைது.
தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் 4 -வது தெருவை சேர்ந்தவர் சின்னி கிருஷ்ணன். இவரது மகன் செந்தில்குமார், இவர் தனது சகோதரரின் மகனுக்காக வேலைக்கு திருச்சி புத்தூரைச் சேர்ந்த குணா என்கிற நாகராஜன் என்பவரை அணுகினார். அப்போது தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலைக்கு ரூ 20 லட்சம் பேசி கடந்த 2017ஆம் ஆண்டு ரூ 5 லட்சம் அட்வான்ஸாக செக் மூலம் கொடுத்தனர். பின்னர் ரூபாய் 7 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மொத்தம் ரூபாய்12 லட்சம் கொடுத்து உள்ளனர். ஆனால் இதுவரை வேலையும் ரெடி செய்து கொடுக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. காலம் தாழ்த்திய தால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட செந்தில்குமார் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் வழக்குப்பதிந்து புத்தூரைச் சேர்ந்த குணா என்கிற நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
4.
திருவரங்கத்தில்
கல்லூரி மாணவி
திடீர் மாயம்.
திருவரங்கம் கீதபுரம் அருண் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் மகாலட்சுமி ( வயது 20). இவர் திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பி .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் வீட்டை விட்டு வெளியே சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராஜா, தாய் மணிமேகலை ஆகியோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் மகாலட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மணிமேகலை திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.