Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

0

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த ‘பாஸ்போர்ட் கவர்’ தான் வந்துள்ளது என்று கருதிய மிதுன் பாபு அந்த கவரை பிரித்து பார்த்துள்ளார்.

ஆனால், கவரை பிரித்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட கவரில் ‘பாஸ்போர்ட் கவருக்கு’ பதிலாக உண்மையான ‘பாஸ்போர்ட்’ இருந்துள்ளது. இந்திய அரசால் விநியோகிக்கப்படும் ’பாஸ்போர்ட்’ அமேசானில் தான் செய்த ஆர்டரில் எப்படி வந்தது என்பது தெரியாமல் மிதுன் குழப்பமடைந்துள்ளார்.

இது குறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவில் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த மிதுன், அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார்.

உடனடியாக பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த முகவரியை தொடர்பு கொண்ட மிதுன் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து கூறியுள்ளார்.

அப்போது தான் அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் உண்மையான பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கியுள்ளார். அதில் தனது பாஸ்போர்ட்டை வைத்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.

திருப்பி அனுப்பும் போது கவரில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட்டை அவர் எடுக்க மறந்துவிட்டார். முகமது சலீமிடமிருந்து ரிட்டன் வந்த பாஸ்போர்ட் கவரை மறுசோதனை செய்யாத ஆன்லைன் வணிக நிறுவனத்தினர் மீண்டும் அதே பாஸ்போர்ட் கவரை மிதுனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால், சலீமின் உண்மையான பாஸ்போர்ட் ‘கவர்’ ஆர்டர் செய்த மிதுன் வசம் சென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.