Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கைவினை மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குனர் ராஜசேகரை தற்காலிக பணி நீக்கம் செய்ய சமூக ஆர்வலர் கணேசன் வேண்டுகோள்.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கைவினை மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குனர் ராஜசேகரை தற்காலிக பணி நீக்கம் செய்ய சமூக ஆர்வலர் கணேசன் வேண்டுகோள்.

0

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன்திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில்:-

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கைவினைப் பயிற்சி மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குநராக பணியாற்றும் ராஜசேகர் என்பவர் மீது கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளேன். எனினும் கடந்த ஆட்சியில் இதுகுறித்து விசாரணை நடத்தாமல் புகார் மனுவை முடித்து வைத்து விட்டார்கள்.

பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆட்சியில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடமும் புகார் அளித்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி புகார் மனுவை ஆதாரங்களுடன் அளித்தேன்.

அதனடிப்படையில் துறை செயலாளர் மூலம் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

286 பக்க ஆவண ஆதாரங்கள், 52 பக்க புகார் மனு ஆகியவை அளிக்கப்பட்டது.

விசாரணை நடத்த உத்தரவிட்ட போதும் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜசேகர் அதே பதவியில் நீடித்து வருகிறார். இதனால் விசாரணை நியாயமாக நடைபெற கூடிய வாய்ப்பு இல்லை. ஆகையால் அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும். அல்லது விசாரணை முடியும் வரை அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் செய்த அதிகாரி அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ராஜசேகரை அந்த பதவியிலிருந்து மாற்றிவிட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.