தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் திருச்சியில் 5 ஏக்கரில் 5 கோடி செலவில் 150 அடி உயர தேவர் சிலை.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் திருச்சியில் 5 ஏக்கரில் 5 கோடி செலவில் 150 அடி உயர தேவர் சிலை.
- திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 150 அடி உயர முத்துராமலிங்க தேவர் சிலை
ரூ 5 கோடி செலவில் அமைக்க திட்டம்.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் ஆகியோர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,;
தமிழகத்தில் 132 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது தஞ்சாவூரில் 150 அடி உயரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது,
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருச்சியைச் சேர்ந்த ராமானுஜர் பாடுபட்டார்.
அதற்குப்பின்னால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.
அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில்ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பலதரப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்ட ராமானுஜர் வாழ்ந்த மண்ணான திருச்சியில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக திருச்சி. சென்னை ரோட்டில் சமயபுரம் பகுதியில் 8 இடங்களை பார்வையிட்டு உள்ளோம்.
முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைய உள்ள அந்தப் பகுதியில் தென் தமிழகத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட 25 தலைவர்களின் சிலைகள் அமைக்கப்படும், மேலும் பூங்கா நூலகம் போன்ற வசதிகளும் இடம்பெறுகிறது.
ஐந்து ஏக்கர் நிலப் பரப்பளவில் ஐந்து கோடி ரூபாய் செலவில் இதனை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இது பார்வர்ட் பிளாக் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம். இவ்வாறு திருமாறன் கூறினர்.
பின்னர் ராம ரவிக்குமார் கூறும்போது இன்று மகாளய அமாவாசை ஆனால் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என இந்துக்கள் வருத்தப்படுகிறார்கள் ஆகவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து நாட்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார். பேட்டியின்போது தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் காசிமாயதேவர் உள்பட பலர் உடனிருந்தனர்.