தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேரடி ஆலோசனை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேரடி ஆலோசனை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இந்த மழைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி, அவர்களுக்கு இருப்பிடம், உணவு வசதிகளை ஏற்படுத்தும் பணி, மழையில் சரியும் மரங்கள், மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அவரவர் மாவட்டத்தில் இருந்தபடி இதில் பங்கேற்க உள்ளனர்.