டெங்கு பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை கூறுகிறார் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
டெங்கு பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை கூறுகிறார் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
பரவிவரும் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப திருச்சி
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்..காமராஜ் எளிய ஆலோசனை.
மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். அது ஒருவகையான வைரஸ் காய்ச்சல். இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஒருவகை ஏடிஎஸ் என்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது.
இக்கொசுக்கள் கடிப்பதால், ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் திரும்ப இக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு.
அதிக காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி | வாந்தி, வயிற்றுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்புவலி ஆகியவை இவற்றின் முக்கியமான அறிகுறிகளாகும்.
நோய் தீவிரமடையும்போது இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. பல் ஈறுகளில் இரத்தம், மலம் கழிக்கும்போது இரத்தம், மூக்கில் இரத்தம் வடிதம் இப்படி ஏதேனும் அறிகுறிகளை ஏற்படுத்தி தீவிரமடைகிறது.
சிலபேருக்கு டெங்கு ஷாக் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு அதாவது, ரத்தத்தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.
‘
ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனைகள் செய்து நோய் தீவிரமாகாமல் காத்துக்கொள்ளலாம். முழு இரத்தப் பரிசோதனை மூலம் இரத்தத்தில் தட்டணுக்கள் சோதனை மற்றும் நோய்கண்ட முதல் நாளே ஆன்ட்டிஜென் சோதனை எடுத்து டெங்கு காய்ச்சல் உள்ளதா என உறுதி செய்துகொள்ளலாம்.
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதனை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். டெங்கு காய்ச்லுக்கு சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் பயன் படுத்தப்படுகிறது.
நிலவேம்பு, விளாமிச்சம் வேர், வெட்டி வேர், சுக்கு, மிளகு, சந்தனம், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், பற்படாகம் உள்ளிட்ட 9 வகையான மூலப்பொருட்கள் இதில் கலந்துள்ளன.
இம்மருந்துகள் காய்ச்சலை கட்டுப்படுத்தி உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்து, காய்ச்சலுடன் கூடிய வலி மற்றும் வீக்கத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் பசியைத் தூண்டி,கிருமிகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி உடல்
மற்றும் மனநிலையை நன்கு வைத்துக்கொள்ள இந்த ஒன்பது வகை மருந்துகள் உதவுகின்றன.
இந்த ஒன்பது மூலப்பொருட்களில் நோய் தீர்ப்பதில் நிலவேம்புக்குத்தான் முக்கியப்பங்கு உள்ளது. இதனால்தான் இதனை நிலவேம்பு குடிநீர் என அழைக்கிறோம். இதில் உள்ள வேதிப்பொருட்கள் காய்ச்சலை குணப்படுத்துவதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் வரை மருத்துவர் பரிந்துரையோடு அருந்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கஷாயம் புதிதாக தயாரிக்க வேண்டும்.
இரதத்தத்தில் தட்டணுக்கள் குறையும்போது பப்பாளி இலைச்சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 5 மிலி அளவு காலை, மதியம், மாலை, இரவு என ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தேன்கலந்து எடுத்துக்கொண்டால் இரத்தத்தில் தட்டணுக்கள் மற்றும் வெள்ளையணுக்களை அதிகரித்து நோயின் தீவிரத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
மேலும் அரசு சித்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய்ங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதனை பயன்படுத்தி டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.