ஊரக திறனறிவு தேர்வு.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் தேர்வு.
ஊரக திறனறிவு தேர்வு.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் தேர்வு.
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தபால் தலை வெளியிட்டு பாராட்டு.
ஒவ்வொரு ஆண்டும் ஊரகப் பகுதி மாணவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும்
“ஊரக திறனறித் தேர்வு” நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இத்தொகை 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை அம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.,
இதில் வெற்றி பெற்றவர்கள் பெறும் மொத்த தொகை ரூபாய் 48,000/-ஆகும்.
தேசிய அளவில் நடைபெற்ற இத் தேர்வில் இவ்ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜீவிகா, கனிஷ்கா, இலக்கியா ஆகிய மூன்று மாணவிகள் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் மூவரும் தலைமை ஆசிரியை கீதா தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது “எனது தபால்தலை” என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் ஊரக திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவிகளின் உருவப்படம் பொறித்த தனித்தனி தபால்தலைகள் முதன்மைக் கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வெற்றிக்கு வித்திட்ட ஆசிரியப் பெருமக்களையும் தலைமை ஆசிரியரையும் பாராட்டினார்.
மேலும் கிராமப்புறப் பகுதி மாணவ மாணவிகள் அனைவரும் இத்தேர்வில் வருகிற ஆண்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.
கிராமப்புற மாணவ மாணவிகளின் வெற்றியை வெகுவாகப் பாராட்டிய முதன்மைக் கல்வி அலுவலரை காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பொதுமக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.