ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற இரண்டு நாள் சிலம்ப பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி 20/09/21 மற்றும் 21/09/21ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் ஜெயக்குமார் செயலர் சிலம்பக் கழகம் திருச்சி மோகன் தலைவர் சிலம்பம் கோர்வை இந்தியா ஆகியோர் சிலம்ப பயிற்சி அளித்தனர்.
கல்லூரி மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டுப் பயிற்சி பெற்றனர்.
இதனை கல்லூரி செயலர் அம்மங்கி வி பாலாஜி, ஆலோசகர் ராமானுஜம், இயக்குனர் த ஸ்ரீவித்யா, முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சைமணி மற்றும் துறைத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையினை கல்லூரி உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் கருப்பையா மற்றும் பிருந்தா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.