Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் மருத்துவர் மீது வழக்கு.

0

'- Advertisement -

மருத்துவ மனையில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும் எனக் கூறி,
திருச்சியில் ரூ 24 லட்சம் மோசடி செய்த பெண் டாக்டர்.
மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை.

திருச்சி ராணி தெருவைச் சேர்ந்தவர் ஜோ. இவரது மனைவி சௌமியா.பல் மருத்துவர் .

இவர் திருச்சி ஆண்டாள் வீதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

.இந்நிலையில் தென்னூர் அண்ணா நகரைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் தனது மருத்துவமனையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Suresh

இதற்கு அசோக் சம்மதித்து 24 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

லாபமாக இரண்டு மாதங்கள் பணத்தை டாக்டர் சௌமியா அசோக்கிடம் வழங்கியுள்ளார் .

பின்னர் லாபத்தை கொடுக்கவில்லையாம். இதனால் தொடர்ந்து அசோக் பணத்தை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அசோக் இது குறித்து திருச்சி ஜெ.எம். எண்.1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் டாக்டர் செளமியா மற்றும் அவரது தந்தை காமராஜ்,சகோதரர் நவநீத் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.