திருச்சி பெரிய மிளகுபாறை ஸ்ரீ ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழா. அன்னதான நிகழ்வை போயர் நல சங்க தலைவர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார் .
திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை போயர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஒப்பந்ததாரர் ஆர்.ஆர்.எஸ். ரெங்கசாமி தொடங்கி வைத்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளூர் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் லோகநாதன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னதாக காலையில் மன்னார்புரம் கலெக்டர் இல்ல சாலையில் ஆர் ஆர் எஸ் அலுவலகம் அருகே போயர் நல சங்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கலுடன் நீர் மோர் வழங்கினார் ரங்கசாமி.
இந்த கும்பாபிஷேகம் மற்றும் நீர்மோர் பந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் போயர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் ஆர் ஆர் எஸ் ரங்கசாமி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.