Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பயின்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு நூல் சமர்ப்பணம் செய்த கட்டிடக்கலை பொறியாளர்.

0

'- Advertisement -

பயின்ற கல்லூரிக்கு
நூல்   சமர்ப்பணம்

கட்டடக்கலை பொறியாளரும், பதிவு பெற்ற  மதிப்பீட்டாளருமான பி. கனசபாபதி, அவர் எழுதிய 30 ஆவது நூலை,  தான் பயின்ற  தேசிய தொழில் நுட்பக்கழக கல்லூரிக்கு சமர்பித்துள்ளார்.


திருச்சி, தேசிய  தொழில் நுட்பக்கழகத்தின் (அப்போது மண்டல பொறியியல் கல்லூரி ஆர் இ சி) மேனாள் மாணவர் பி. கனகசபாபதி. திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் வசித்து வருகிறார்.

கட்டடக்கலை பொறியாளரான இவர்,  நேரடி வரிகளின் மத்திய வாரியத்தால் ( சி பி டி டி)  அங்கீகாரம் பெற்ற நாட்டின் மிகச்சிறந்த 6 மதிப்பீட்டார்களில் ஒருவராகவும் திகழ்வதுடன், மதிப்பீடு தொடர்பாக மொத்தம் 30 நூல்களையும், வேறு தலைப்புகளில் 6 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவை தவிர 774 கட்டுரைகளும் எழுதியுள்ள அவர் பல்வேறு (52) நாடுகளுக்குச்சென்று அங்கு நடைபெற்ற கருத்தரங்குகளில் மதிப்பீடு தொடர்பாக உரைகளும் ஆற்றியுள்ளார்.

தனது 40 வயதில்  இந்திய மதிப்பீட்டாளர் கழகத்தின் உப தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர் 11 முறை அப்பதவியை வகித்துள்ளார்.

இந்நிலையில், மதிப்பீடு தொடர்பாக அவர் எழுதியுள்ள (மதிப்பீட்டின் அடிப்படை கொள்கைகள் என்ற பெயரிலான)   30 ஆவது நூலை, தனது கல்லூரிக்கு சமர்பிக்க முடிவு செய்தார். அதன்பேரில் அந்த நூலை அவர் படித்த கல்லூரியான திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தின் இயர்குநரான மினி ஷாஜி தாமஸிடம்  வழங்கினார்.

கனகசபாபதியின் கட்டுரைகளை இந்தியன் வேல்யூவர் இதழில் 374 தடவை பிரசுரம் செய்துள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களும் வழங்கியுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 18 விருதுகளை பெற்றுள்ள அவர் அகில இந்திய மதிப்பீட்டாளர் கழகம் சார்பிலும் விருது பெற்றுள்ளார். அவர் பயின்ற தேசிய தொழில் நுட்பக்கழகமும் அவருக்கு மிகச்சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் மதிப்பீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக திருச்சியில் மதிப்பீடு தொடர்பான வகுப்புகளையும் இலவசமாக  எடுத்து வருகிறார்.  அவரது மகன் அருண் மற்றும் மகள் அருணா இருவரும் மதிப்பீட்டாளர்களாவே உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.