Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடு ஒதுக்கவேண்டும். உலக முடி திருத்துவோர் தின விழாவில் தீர்மானம் .

0

'- Advertisement -

ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ராஜலிங்கம், ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.

மேலும் நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும், ஊராட்சி கிராமப்புற தொழிலாளர்களையும் அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும்.

Suresh

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்கவேண்டும்,

மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

எம்பிசி உள் ஒதுக்கீட்டை இரண்டரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் மற்றும் பி.சி.ஆர் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மாரிமுத்து, ஜீவரத்தினம், பிரபாகரன், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.