உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பங்கேற்ற திருச்சி வீரரை வரவேற்ற திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த டொனால்ட் மகிமை ராஜ் (வயது19) டிரிபிள் ஜம்பர் (Triple Jamp) (மும்முறை குதிப்பவர்) பிரிவில் இந்திய அளவில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் நடந்த பயிற்சி முகாமில் 15.76 மீட்டரைத் தாண்டி தேசிய அளவில் முதலிடம் பெற்று உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப்ஸ் (U20) கென்யா நாட்டில் நைரோமி இடத்தில் ஆகஸ்ட் 18 – 22 தேதி நடந்த XVIII – உலக தடகள போட்டியில்
இந்தியா சார்பில் டிரிபிள் ஜம்பரில் , 3 சென்டி மீட்டரில் வெண்கலப் பதக்கத்தை தவறிவிட்டு 4 – வது இடத்தை (15.82 மீட்டர் தாண்டி ) பிடித்தார்.
இவருக்கு பயிற்சியாளராக லால்குடி ராமசந்திரன் , தற்போது கோவையில் கல்லூரி படிப்பதால் நிஜாமுதீன் பயிற்சியாளராக உள்ளார்.
திருச்சிக்கு வருகை புரிந்த டொனால்ட் மகிமை ராஜ் அவர்களை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ , பொருளாளர் ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் நீலமேகம்,லால்குடி பயிற்சியாளர் ராமசந்திரன், திருச்சி மாவட்ட தடகள சங்க நாகராஜ், சாகுல் ஹமீது , சேவியர், மகிமை ராஜ் , லீலா மற்றும் பலர் வாழ்த்தி வரவேற்றார்கள்.