பள்ளி செல்லா மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு சார்ந்த ஆலோசனை கூட்டம்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிசெல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு சார்ந்த ஆலோசனைக் கூட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வியின் சார்பில் 2021 -2022 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு சார்ந்த ஆலோசனைக் கூட்டம் மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல் படி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமையில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 13 ஒன்றியங்களில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளி செல்லா,இடைநின்ற,புலம்பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு செய்தல் மற்றும் அவர்களுடைய விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.
இக்கணக்கெடுப்பு பணியை எவ்வாறு மேற்கொள்வது,மேற்பார்வையிடுவது என்பது பற்றி சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்( பொறுப்பு) வட்டார சிறப்புக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை புள்ளியல் அலுவலர் உஷா,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணிமாறன்,
ரெகுநாததுரை ஆகியோர் செய்திருந்தனர்.