காருகுடி அரசு உயர் நிலைப் பள்ளியின் சார்பில் கொரோனாவின் மூன்றாம் அலையைத் தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
தமிழக முதல்வரின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி
“வருமுன் காப்போம், வளமுடன்
வாழ்வோம்”என்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காருகுடி கிராம பொதுமக்களிடம் நடத்தப்பட்டது.
அதுசமயம் பள்ளியின் தலைமை ஆசிரியர தி. கீதா மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கிராமத்தின் பொது மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
கட்டாயம் முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லாமல் தவிர்த்தல், அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுவதால் கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றதோடு தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு தெளிவும் பெற்றனர்.