திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான் மலை பகுதியில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்வதாக உரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது உய்யகொண்டான் பாலம் அருகே சந்தேகத்திற்குரிய அடிப்படையில் வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். இதைக்கண்ட போலீசார் சந்தேகத்திற்குரிய அடிப்படையில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 33)என்பதும் அவர் நீண்ட காலமாக அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்து உறையூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.