திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு மூல தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்சவல்லி (வயது 45).
சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். அப்போது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 26) மணிகண்டன் (வயது 24) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று பார்த்திபன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் அம்சவள்ளி வீட்டின் அருகே சென்று தகாத வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மிரட்டியும் உள்ளனர். இதனால் அச்சம் அடைந்த அம்சவல்லி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை மிரட்டிய வாலிபர்களை கைது செய்ய விரைந்தனர். அதைத்தொடர்ந்து பார்த்திபன் தப்பிச் சென்றுவிட்டார்.
மணிகண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.