Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாஜகவின் முற்றுகை போராட்டத்தினால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு மேற்பார்வையாளருக்கு மீண்டும் பணி

0

துப்புரவு மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கத்தை கண்டித்து.
திருச்சி மாநகராட்சியை பாரதிய ஜனதா கட்சி முற்றுகை .
துப்புரவு பணியாளர்களும் திரண்டதால் பரபரப்பு


திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இங்கே நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.

அவர்களை துப்புரவு மேற்பார்வையாளர் நிர்வகித்து பணிகளை மேற்கொள்வர்.
இதில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு திமுக வட்ட செயலாளர் புஷ்பராஜ் என்பவர் மாதந்தோறும் 15000 மாமுல் கேட்டு வற்புறுத்தியதாக கூறியதாக கூறப்பட்டது.

இதனால் துப்புரவு மேற்பார்வையாளர் வேலுச்சாமி என்பவரை கடந்த ஆறு மாதமாக துப்புரவு பணியில் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என காரணம் கூறி மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது.

இதை கண்டித்தும் அவரை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும் திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.வீரமணி தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன், மண்டல் பொதுச் செயலாளர் மல்லி செல்வம், மகளிர் அணி மாவட்டத் தலைவி புவனேஸ்வரி, மண்டல் தலைவர்கள் குருநாதன், இளங்கோ, பட்டியல் அணி மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மண்டல் செயலாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் தமிழரசி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராவணன், வர்த்தக அணி மண்டல் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் சுவேந்திரன், மகளிர் அணி மண்டல் தலைவர் கவிதா மோகன், பொதுச் செயலாளர் வாசுகி, மாவட்டச் செயலாளர் வேளாங்கண்ணி, இளைஞரணி மண்டல் பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார், காளியப்பன், வார்டு பொறுப்பாளர் ரெங்கராஜ், பிரவீன், பட்டியல் அணி மண்டல் தலைவர் ஆறுமுகம் பாரதிய ஜனதா கட்சியினர்

மற்றும் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் திருச்சி மாநகராட்சி பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டக்காரர்கள், அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துப்புரவு மேற்பார்வையாளர் வேலுச்சாமி ஒரு வார காலத்திற்குள் மீண்டும் அதே பகுதியில் பணி அமர்த்தப்படுவர் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மாநகராட்சி முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டத

இந்த சம்பவத்தால் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.